இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் இருக்கிறது - பிரதமர் மோடி உரை.!
dindukal gandhikirama covacation function modi speach
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
மகாத்மா காந்தி காந்திகிராம பல்கலைக் கழகத்தை திறந்து வைத்தார். இந்த பல்கலைக்கழகத்தில் கிராமப்புற மேம்பாடு குறித்த அவரது எண்ணங்களின் உணர்வை காணலாம். ஆனால், கிராமத்தின் ஆன்மா.. நகரத்தின் வசதி.. என்பதே எங்களின் கொள்கையாக உள்ளது.
ஆனால், காந்தியின் கொள்கைதான் தற்சார்பு இந்தியா திட்டம். நாட்டின் தற்போதைய வளர்ச்சி கிராமத்தை நோக்கி தான் சென்றுகொண்டிருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் சுயமாக செயல்பட்டால் தான் நாடும் சுயமாக செயல்படமுடியும். அதேபோல், கிராமங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் பிரச்சனைகளை ஒன்றாக எதிர்கொள்ளலாம்.
தபோது, கிராமங்களில் இணையம் அதிக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக இரண்டு லட்சம் கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.
தமிழ்நாடு எப்போதும் தேசிய உணர்வுமிக்கதாக இருந்து வருகிறது. இதையடுத்து, காசியில் காசி தமிழ் சங்கமம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்தும் கொண்டாடப்படும். இந்தியாவின் எதிர்காலமே இளைஞர்களின் கையில் இருக்கிறது" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
English Summary
dindukal gandhikirama covacation function modi speach