திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை.. திருமாவளனுக்கு பதிலடி கொடுத்த இயக்குனர் பேரரசு.! - Seithipunal
Seithipunal


பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. திருமாவளவனின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் மன்னரை இந்து அரசனாக சித்தரிக்கும் முயற்சி செய்கின்றனர் என பேசி பெரும் சர்ச்சையை உருவாக்கினார். 

ராஜராஜ சோழன் சைவர் அவர் இந்து இல்லை என சீமான், திருமாவளவன், நடிகர் கமலஹாசன் உள்ளிட்டோர் பேசி இருந்தனர்.

இதற்கு பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா, வானதி சீனிவாசன் மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இதனை கடுமையாக எதிர்த்தனர். ராஜராஜ சோழன் இந்து தான் என பல்வேறு விளக்கங்களை பாஜக தரப்பிலிருந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து விசிக திருமாவளவன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். இந்து சமய அறநிலைத்துறை பெயரை மாற்ற வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அதன்படி இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்று பிரித்திட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் திருமாவளவனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள இயக்குனர் பேரரசு, "திருமாவளவன் கூறுவது போல இந்து மதத்தை சைவம், வைணவம் என்று பிரித்து விட்டு தமிழகத்தை சோழ, பாண்டிய, சேர நாடுகள் என்று பிரித்து விடுங்கள். மீண்டும் தெருக்களின் பெயர்களில் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளுங்கள். மேலும், சைவ, வைணவ காலத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் மதமும் இல்லை அதனால் அந்த மதங்களை இந்தியாவில் இருந்து அகற்றி விடுங்கள். முக்கியமாக அப்போது திராவிடம் என்ற வார்த்தையே தமிழர்களிடையே இல்லை அதனால் முதலில் அந்த வார்த்தையை எங்கும் இல்லாமல் செய்து விடுங்கள். மேலும் இந்தியாவையும் பாகிஸ்தானையும் இணைத்து விடுங்கள். திருமாவளவன் சொல்வது போல நாம் 2000 ஆண்டுகளுக்கு முன் சென்று விடுவோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director perarasu reply to thirumavalavan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->