கள்ளச்சாராய கள்ளக் கூட்டணி! அதிகார வெறி, பண வெறி! இனியாவது... அதிரவைத்த தங்கர்பச்சான்! - Seithipunal
Seithipunal


பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று தனது தலையங்கத்தில் எழுதி உள்ள செய்தியில், "அடுத்த வேலை சோற்றுக்கு அல்லாடும் சுமார் 60 தினக் கூலிகளின் குடும்பங்களை கள்ளக்குறிச்சி கள்ளச்சாரையும் நீராதரவாக்கி உள்ளது. 

கடந்தாண்டு மரக்காணத்தில், செங்கல்பட்டிலும் நிகழ்ந்த கள்ளச்சார மரணங்களில் இருந்து எந்த பாடத்தையும் மு.க ஸ்டாலின் அரசு கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான், கள்ளக்குறிச்சி மரணங்கள் முகத்தில் அறைந்து சொல்கின்றன.

இந்த மரணங்களுக்கு கள்ளக் கூட்டணி அமைத்து, இந்த குற்ற செயலுக்கு ஆதரவாக இருந்த அரசியல்வாதிகள், காவல்துறையினர் மற்றும் அரசு நிர்வாகத்தினரே முழு பொறுப்பு. ஒட்டுமொத்த காவல்துறையே வெட்கி தலை குனிய வேண்டும்.

டாஸ்மார்க் வருமானத்தில் தான் மக்கள் நலத்திட்டங்கள் நடக்கின்றன என்பது பெருமை அல்ல, சிறுமை. கள்ளச்சாராய மரணங்களை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ இல்லாத அளவுக்கு அழுகிப் போய் இருக்கிறது இந்த அரசாங்கத்தின் ஈரல். 

நிச்சயமாக இது திராவிட மாடல் அரசுக்கு பெருமை சேர்க்காது" என்ற அந்த செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் தங்கர்பச்சான், "என்று தணியும் இந்த குடிவெறி தாகம்? என்று மடியும் இந்த திராவிட மாடல் மோகம்?"

இந்தத் தலையங்கத்தை படிப்பதற்கு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அமைச்சர்களுக்கும், திமுக  சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், 40/40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் நேரம் இருக்கின்றதா? 

அதிகார வெறி பண வெறிக்காக சாராயம் விற்பதை உடனடியாக நிறுத்திவிட்டு இனியாவது மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவதைப் பற்றி சிந்தியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Thankar Bachan share kallakurichi kallasarayam news


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->