தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தை நீக்கினார் இயக்குனர் வெற்றிமாறன்! - Seithipunal
Seithipunal


தலை தெரிக்க ஓடிய வெற்றிமாறனுக்காக வரிந்து கட்டும் அரசியல் பிரபலங்கள்!

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60 வது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் "வள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை ஒரு இந்து அரசனாக்குவது என பல அடையாளங்கள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள் என பேசி இருந்தார்.

இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு தரப்பட்ட மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவருடைய கருத்துக்கு ஆதரவாக அரசியல் பிரபலங்கள் பலர் ஆதரவாக குரல் கொடுத்தனர். 

நடிகரும் முக்குலத்தோர் புலிகள் படையின் தலைவருமான கருணாஸ் "ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள்.இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம். ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கி தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறிக்கிறார்கள் என இயக்குநர் வெற்றிமாறன் கூறிய கருத்து மிக உண்மையானது, சரியானது. அவரை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது" என வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் "ராஜராஜ சோழன் ஒரு தமிழ் பேரரசன். நம்பிக்கையில் சைவர். தமிழில் சங்க, சைவ,வைணவ இலக்கியங்கள் உண்டு. இந்து இலக்கியம் என்று எதுவும் இல்லை. பாஜகவிற்கு தமிழக வரலாற்றைப் பற்றி எவ்வித அறிவும் ,அக்கறையும் இல்லை. மதவெறி மட்டுமே பிரதானம். சினிமா உட்பட எந்தக் கலைவடிவமும் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது. இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களின் கருத்து சரியானதே" என பதிவிட்டிருந்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் "இராஜராஜ சோழன் காலத்தில் சைவம் வேறு; வைணவம் வேறு. திருநீறு பட்டை வேறு; திருமண் நாமம் வேறு. இரண்டும் வெளிப்படையாக மோதிக்கொண்டன. குருதிச் சேற்றில் தலைகள் உருண்டன. மாறிமாறி மதமாற்றம் செய்து கொண்டன. அக்காலத்தில் ஏது இந்து? இக்காலத்து லிங்காயத்துக்களே தாங்கள் இந்துக்கள் இல்லை.என்று உரத்துச் சொல்கின்றனர்.போராடவும் செயகின்றனர். இந்நிலையில் 1000 வருடங்களுக்கு முன்னர் லிங்கத்துக்குப் பெருங்கோயில் கட்டியதால் அவர்மீது இன்றைய அடையாளத்தைத் திணிப்பது சரியா? இது வரலாற்றுத் திரிபாகாதா?ஜஇதைத்தானே குறிப்பிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அவர் பெரியாரின் பேரன். என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

இவ்வாறு அனைத்து அரசியல் பிரபலங்களும் வெற்றிமாறனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு பேசி வரும் நிலையில், இணையதள வாசிகளின் எதிர் கருத்துகளால் வெறுப்பாகி போன வெற்றிமாறன். திடீர் என தனது ட்விட்டர் பக்கத்தை நீக்கியுள்ளார். கருத்துச் சுதந்திரம், கருத்துரிமை பற்றி பேசுவோர் அதற்கு எதிராக வரும் கருத்துகளையும் எதிர்கொள்ள வேண்டும். இவ்வாறு கருத்து கூறிவிட்டு தலை தெரிக்க ஓட கூடாது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Vetrimaaran removed his official Twitter account


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->