துணை நடிகரின் கார் மோதி இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் பலி.! - Seithipunal
Seithipunal


துணை நடிகரின் கார் மோதி இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர் பலி.!

சென்னையில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் பிரபல சினிமா இயக்குநரான வெற்றிமாறனிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சரண்ராஜ் நேற்று இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஓன்று சரண்ராஜ் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரண்ராஜ் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சரண்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் சாலிகிராமம் எம்சி அவென்யூ பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பதும், அவர் சினிமாவில் துணை நடிகராக உள்ளதும் தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director vetrimaran asistant died for accident in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->