#நெல்லை || மரத்தில் சிக்கிய கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பேரிடர் மீட்புக்குழுவினர்.!! - Seithipunal
Seithipunal


தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் வெள்ளத்தில் சிக்கி மரத்தின் மீது தஞ்சமடைந்த கர்ப்பிணி பெண் மற்றும் அவருடைய உறவினர்கள் பேரிடர் மீட்புக்குழுவினரால் ஐஎன்எஸ் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார். 

தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் இது குறித்த தகவல் அறிந்த உடன் அவரின் உத்தரவின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்பி தலைமையிலான பேரிடர் மீட்புகுழு ஹெலிகாப்டர் உதவியுடன் மரத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்டு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இறக்கி விட்டனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிகனமழையினால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்கள் வாட்ஸ் அப், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கோரலாம் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

disaster rescue team safely rescued the pregnant woman stuck in tree in nellai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->