மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை.. போக்குவரத்து எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தில் இலவச பஸ் பாஸ் மூலம் தினமும் லட்சக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கிவிடும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது 2019-2020 ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை வைத்திருந்தால், நடத்துநர்கள் மாணவர்களை இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disciplinary action if students are dropped from the bus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->