ஏனாம்மில் பல்வேறு இடங்களை செய்த மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்!
District Collector Kulothungan visits various places in Yanam
ஏனாம் சென்றுள்ள புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு. குலோத்துங்கன் கனகலாபேட்டாவில் அமைந்துள்ள PIPDIC நிலத்தை சரிபார்த்தார்.இதையடுத்து அவர் அங்குள்ள திடக்கழிவுகள் அனைத்தையும் கொட்டப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் திரு. குலோத்துங்கன் அ. இஆப அவர்கள் அரசு முறை பயணமாக 24.4. 2025 மற்றும் 25. 4. 2025 ஆகிய இரு தினங்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்திற்கு ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார்கள்.
அங்கு சென்றவுடன் யானாம்பிராந்திய அதிகாரி திரு. முனுசாமி அவர்கள் ஆட்சியரை வரவேற்றார்கள். பிறகு முதலில் இந்தியத் தேர்தல் ஆணையத்துடனான காணொளி காட்சியில் கலந்து கொண்ட பிறகு, ஏனாமில் வள மீட்புப் பூங்கா (ஆர்.ஆர்.பி) அமைப்பதற்காக அரசாங்கத்தால் மாற்றப்பட்ட மின்சார துணை மின்நிலையத்தில் உள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டார்கள்.
அடுத்ததாக குருசம்பேட்டையில் உள்ள கோவில் நிலத்தை ஆய்வு செய்த பின்பு கனகலாபேட்டையில் இதுவரை ஏனாம் திடக்கழிவுகள் அனைத்தையும் கொட்டப்பட்ட இடத்தை ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்கள். மேலும் கனகலாபேட்டாவில் அமைந்துள்ள PIPDIC நிலத்தை சரிபார்த்தார்கள். பிறகு ஏனாம், ரீஜென்சி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் உள்ளே கையகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட இடங்களையும், முதுதோமுலு அருகே உள்ள மெட்டசூரில் உள்ள தனியார் நிலத்தையும் அவர் ஆ
செய்தார்கள்.
இன்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள். இந்நிகழ்வில் ஏனாம் பிராந்திய அதிகாரி திரு. முனுசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டார்கள்.
English Summary
District Collector Kulothungan visits various places in Yanam