சேலத்தில் குப்பையால் வந்த விவகாரம்...! லாரி விட்டு கார் மீது மோதிய பக்கத்து வீட்டுக்காரர்...!!!
garbage incident Salem neighbor who left lorry and hit car
சேலம் மாவட்டத்தில் அம்மம்பாளையப் பகுதியில் 'அனிதா' என்பவர் வசிக்கிறார். இவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அனிதாவிற்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.

மேலும், குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி, அவரது உறவினரின் உதவியால் அனிதாவின் கார் மீது லாரியை விட்டு ஏற்றியுள்ளார். இந்த மோதலில் காரின் முன்பகுதி படுமோசமாக சேதமடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மேலும் இந்தப் பிரச்சனைக்கு காரணமான 'பாலமுருகன்' என்பவரை காவலர்கள் வலை வீசி தேடி வருகின்றனர்.
English Summary
garbage incident Salem neighbor who left lorry and hit car