விஜயகாந்த் உடல் தே.மு.தி.க தலைமையகத்தில் நாளை நல்லடக்கம்! - Seithipunal
Seithipunal


தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

மருத்துவமனை தரப்பில், நுரையீரல் அலர்ஜி காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறிது நேரம் அங்கு வைக்கப்பட்டபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் விஜயகாந்த் மனைவியும் தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதாவிடம் முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்தார். 

இதற்கிடையே விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகத்தில் நாளை மாலை 4:45 மணி அளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk leader Vijayakanth funeral tomorrow dmdk headquarters


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->