ஆட்டை கடித்து.. மாட்டை கடித்து.. தற்போது ஆளையே கடித்த கதையாக... - விஜயகாந்த் கண்டனம்!
DMDK leader Vijayakanth post
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இதனை பார்க்கும் போது சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, ''ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது ஆளையே கடித்த கதையாக ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீசிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
சட்ட ஒழுங்கு தமிழ்நாட்டில் எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு இந்த சம்பவம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தமிழக அரசு கவனம் செலுத்தி தடுக்க வேண்டும்.
அரசு குற்றவாளிகளுக்கு துணை போகாமல் தக்க தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
ஆளுநர் மாளிகையிலேயே வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றால் சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக தான் உள்ளது.
எனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
DMDK leader Vijayakanth post