நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய திமுக நிர்வாகியின் செயலால் சர்ச்சை..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டத்தை அடுத்த ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்பழகன். இவர் திமுகவின் பெத்தநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றிய கழக துணைச் செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது பிறந்த நாளை திமுக ஆதரவாளர்களுடன் கொண்டாடியுள்ளார். புத்திர கவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சேலம் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் தனது ஆதரவாளருடன் நடுரோட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். 

இப்பொழுது நூற்றிற்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்களும் திமுகவினரும் நடுரோட்டில் குவிந்தனர். இதனால் அவ்வழியாக சென்ற அரசு பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுக நிர்வாகி நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுக நிர்வாகிகள் இச்செயலை பலத்தரட்ட மக்கள் விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். திமுக நிர்வாகியின் இச்செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK admin celebrated his birthday in the middle of the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->