கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் - திமுக வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றியதையடுத்து, 19-வது வார்டு கவுன்சிலரான கல்பனா மேயராக தேர்வு செய்யப்பட்டார். 

மேலும், கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். ஆனால், கடந்த சில மாதங்களாக திமுக கவுன்சிலர்களே மேயர் கல்பனா மீது அதிருப்தி தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து மேயர் கல்பனா மாமன்ற உறுப்பினர்களுடனும், அதிகாரிகளுடனும் மோதல் போக்கை கடைபிடித்து வந்ததால் தலைமைக்கு அடுத்தடுத்து புகார்கள் சென்றது. இதுகுறித்து விசாரணை செய்த பின்னர் தான், கோவை மேயர் கல்பனா கடந்த 3-ம் தேதி ராஜினாமா கடிதம் அளித்தார். 

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின் படி, கோவை மேயர் பொறுப்புக்கு நாளை மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நேற்று திமுக அமைச்சர்கள் நேரு, முத்துசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு 29-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் ரங்கநாயகி கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk announce covai muncipality meyar election candidate


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->