யார் பார்த்த வேலை டா இது! தஞ்சாவூரில் அண்ணா சிலை மீது திமுக - பாஜக கொடி..!! பரபரப்பு...!
DMK BJP flag Anna statueThanjavur Sensation
பேரறிஞர் அண்ணா சிலை ஒன்று, தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகே உள்ளது. அறிஞர் அண்ணா பிறந்தநாள், நினைவுநாள், மற்ற விஷேச நாள் உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தி.மு.க மகளிர் அணி சார்பில், இன்று அண்ணா சிலை அருகே உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் பயிற்சி பட்டறை கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக தி.மு.க. கொடிகள் அந்த பகுதி முழுவதும் கட்டப்பட்டுள்ளன.
இதற்கிடையே நள்ளிரவில் பேரறிஞர் அண்ணா சிலை மீது பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கொடிகளை இணைத்து மர்ம நபர்கள் போட்டுள்ளனர்.இன்று காலை இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் இரு கட்சியினர்.
இந்த தகவலறிந்து நிர்வாகிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனடியாக மேற்கு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணா சிலை மீது போடப்பட்டிருந்த இரு கட்சி கொடிகளையும் அகற்றினர்.
பிறகு அண்ணா திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து தி.மு.க.வினர் மரியாதை செய்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டது யார் ? அவர்களின் நோக்கம் என்ன ?என காவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுயில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
DMK BJP flag Anna statueThanjavur Sensation