தூத்துக்குடியில் திமுகவினரை விரட்டி அடித்த பொதுமக்கள்.!!
DMK cadres chased away by the public in Thoothukudi
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் 18 வது நாடாளுமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் பல இடங்களில் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருவர் கூட வாக்கு செலுத்த வரவில்லை.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பொட்டலுரணி கிராமத்தில் செயல்பட்டு வரும் மூன்று மின் கம்பெனிகளை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மீன் கம்பெனிகளை மூடாததால் கிராம மக்கள் நேற்று தேர்தலை புறக்கணித்தனர். அவர்களை சமாதானம் செய்ய வந்த திமுகவினரை பொதுமக்கள் உருட்டு கட்டை கொண்டு விரட்டியடித்தனர். இதனால் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
English Summary
DMK cadres chased away by the public in Thoothukudi