திமுக வேட்பாளர்கள் நேர்காணல் - தலைமைக் கழகம் அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தை பொறுத்த வரை கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், திமுக சார்பில் வேட்பாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறபட்டது. இதையடுத்து இந்த வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தலைமைக் கழககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமை கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் வருகிற 10 3 2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் மூலமாக சந்தித்த தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார். 

இந்த நேர்காகணலின் போது அந்தந்த நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்த மாவட்ட கழக செயலாளர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது. அவர்களை எல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk candidates interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->