மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட திமுக கவுன்சிலர் - உயிருக்கு ஆபத்தா?
dmk counsilar paruthi ilamsruti injured for electric shock attack
சென்னை அருகே அயனாவரம் சபாபதி தெருவை சேர்ந்தவர் பரிதி இளம்ஸ்ருதி. மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனும், 99வது வார்டு திமுக கவுன்சிலருமான இவர், தனது வார்டில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து, தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், பரிதி இளம்ஸ்ருதி இன்று அதிகாலை தனது வீட்டில் ஏசி இயந்திரத்தை ஆன் செய்து போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக பரிதியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கவுன்சிலர் பரிதி இளம்ஸ்ருதி தனது வாட்ஸ் அப் குழுவில், "99வது வார்டு பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு வணக்கம். அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் எனது இல்லத்தில் ஏற்பட்ட மின்சார கசிவின் காரணமாக மின்சாரம் தாக்கி நான் பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன்.
எனவே குழுவில் உள்ள உறுப்பினர் அனைவருக்கும் ஏதேனும் குறைகள் இருந்தால் இக்குழுவில் பதிவிடவும். மாநகராட்சி அதிகாரிகள் அதை சரி செய்து தருவார்கள். என்னுடைய அலுவலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அலுவலக உதவியாளர்கள் களத்தில் உள்ளார்கள். மருத்துவ ஆலோசனை பெற்று மீண்டும் களத்தில் வந்து பணியாற்றுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
dmk counsilar paruthi ilamsruti injured for electric shock attack