சென்னை மக்கள் யாரும், அச்சமோ - பீதியோ அடைய வேண்டாம் - DyCM உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து குறைவான நீரே வெளியேற்றப்படுவதாலும் , அதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் பொதுமக்கள் யாரும், அச்சமோ - பீதியோ அடையத் தேவையில்லை என்று, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணத்தால், செம்பரம்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில், அங்கு இன்று நேரில் ஆய்வு செய்தோம்.

ஏரியின் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றப்படும் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தோம். 

ஏரியிலிருந்து விநாடிக்கு 32 ஆயிரம் கன அடி வரை நீரை வெளியேற்றும் அளவுக்கு அதன் கால்வாய்கள், அடையாறு போன்ற நீர்வழித்தடங்கள் உள்ள நிலையில், விநாடிக்கு 4 ஆயிரத்து 632 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

குறைவான நீரே வெளியேற்றப்படுவதாலும் , அதனை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் பொதுமக்கள் யாரும், அச்சமோ - பீதியோ அடையத் தேவையில்லை. 

அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK DyCM Udhayanithi stalin Chennai People Chembarampakkam lake


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->