தொழிலதிபர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி - திண்டுக்கல்லில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் ரஞ்சித் குமார். இவர் சுக்காம்பட்டியில் ஹாலோ பிளாக் தயார் செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக ரஞ்சித் குமார் காண்ட்ராக்ட் பணியில் வேலை செய்த பொழுது, சேடப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் உடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் அகரம் பேரூராட்சியில் இளைஞரணி திமுக பொறுப்பாளராக உள்ளார்.

இதற்கிடையே, தன்னுடன் பணியாற்றிய நண்பர் தனியாக ஹாலோ பிளாக் தொழிற்சாலை நடத்தி வருவதால், ஆத்திரமடைந்த மணிகண்டன் ரஞ்சித் குமாரிடம் தன்னையும், தொழிற்சாலை பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று பலமுறை கேட்டுள்ளார். அதற்கு ரஞ்சித் மறுப்புத் தெரிவித்ததால் மணிகண்டன் அவரை பலமுறை மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், ரஞ்சித் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மணிகண்டன் அலுவலகத்திற்குச் சென்று டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளார். அப்போது, ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்துள்ளனர். இதையடுத்து, ரஞ்சித் இன்று காலை சுக்காம்பட்டி பிரிவில் உள்ள டீக்கடையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த, மணிகண்டன் அவரை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், ரஞ்சித் மனைவி, குழந்தை மற்றும் அவரது அண்ணன் வீட்டிலிருந்த குழந்தைகள் மற்றும் அண்ணன் மனைவி ஆகியோரை தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்து, அங்கு இருந்த காரையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் செல்லும் பொழுது, மணிகண்டன் மற்றும் அவர்கள் உறவினர்கள் வழிமறித்து மீண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால், உயிருக்குப் பயந்த ரஞ்சித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk executive kill threat to business man family in dindukal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->