வெடிகுண்டு வீசி திமுக செயலாளர் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். 

இந்த தாக்குதலில் காரின் முன் பக்கம் முழுவதும் கண்ணாடி உடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆராவமுதன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது, மர்ம நபர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியுள்ளனர். இதில், அவரது கைதுண்டாக போனது. மேலும், பலத்த காயமடைந்தார். 

உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த திமுகவினர் பலரும் மருத்துவமனை வளாகத்தில் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk executive murder in vandalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->