ஈரோட்டில் சோகம் - திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்.!  - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் சோகம் - திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காலமானார்.! 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆண்டமுத்து. இவர் இன்று வயது முதிர்வால் காலமானார். 

இவரது மறைவுச் செய்தி அவரது குடும்பத்தார், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக சார்பாக 1997-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் கடந்த 1997-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி நீடிக்க வேண்டும் என்பதற்காக சேலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் ஆண்டமுத்து பூக்குழி இறங்கியது பெரும் சர்ச்சையானது.

"எனது அரசாங்கம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று நான் கவலைப்படவில்லை. இது எவ்வளவு காலம் பகுத்தறிவின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் என்று நான் கவலைப்படுகிறேன்" எனக்கூறிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, இந்தச் செயலைப் பின்பற்றும் எந்தவொரு நபரையும் கட்சியிலிருந்து விலக்குவேன்" என்று கடுமையாக கண்டித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk formar mla aandamuththu passed away


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->