நகராட்சி ஆணையரை சந்தித்து திமுக பொதுக்குழு உறுப்பினர் கோரிக்கை மனு!
DMK general council member meets municipal commissioner
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு ஒண்டி வீர ஐயனாரப்பன் ஆலயம் பேருந்து நிலைய கான்க்ரீட் தரை கோவிலை விட 2 அடி உயரமாக உள்ளது. இதனால் கோவிலின் தேர் வெளிவர சிரமமாக உள்ளது. ஆகையால் கோவில் வாசலில் உள்ள கான்கிரீட் தரையை சமம் செய்து தருமாறு புதுச்சேரி நகராட்சி ஆணையரை சந்தித்து திமுக பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் கோரிக்கைவிடுத்தார்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் திரு. எஸ். கோபால் அவர்கள் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அவர்களை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில் உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி, சின்ன சுப்புராய பிள்ளை வீதி மற்றும் செயின்ட் தெரேசா வீதி சந்திப்பில் சாலையை உயரமாக போடப்பட்டதால் சின்ன சுப்புராய பிள்ளை வீதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதில் கொசுத்தொல்லை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவிவருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மழைநீர் வெளியேற வழி இல்லை ஆகவே இருபுறமும் உள்ள வாய்க்காலில் வழி ஏற்படுத்தி மழை நீர் வெளியேற வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனை தொடர்ந்து மற்றொரு மனுவில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு ஒண்டி வீர ஐயனாரப்பன் ஆலயம் உள்ளது. இப்பொழுது புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கான்க்ரீட் தரை கோவிலை விட 2 அடி உயரமாக உள்ளது. இதனால் கோவிலின் தேர் வெளிவர சிரமமாக உள்ளது. ஆகையால் கோவில் வாசலில் உள்ள கான்கிரீட் தரையை சமம் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தகர் அணி துணை தலைவர் குரு, இலக்கிய அணி ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் கிரி, அகிலன், விஜயகுமார், அந்தோணி, நெல்சன், முரளி, விமல், பாபு ஆர்ட்ஸ், ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary
DMK general council member meets municipal commissioner