அதிகார மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் - தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய முக ஸ்டாலின்!
DMK Head MK stalin Letter to Perty members june 23
அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்று, தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரின் அந்த கடிதத்தில், ஜனநாயக அறப் போர்க் களத்தில் வாளாகவும் கேடயமாகவும் இருந்து நம்மையும் நம் உயிர்மூச்சான கழகத்தையும் காத்து வருபவர் கருணாநிதி.
அவரை நாம் நினைக்க நினைக்க, எத்தகைய பகையும் வஞ்சகமும் சூழ்ச்சியும் எதிர்நிற்க முடியாமல் தெறித்து ஓடும் என்றும், அத்தகைய மகத்தான தலைவரின் நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடி மகிழ்வோம்.
நம் உயிர்நிகர் தலைவர் நமக்கு ஊட்டியுள்ள லட்சிய உணர்வினால், சோதனைகளையும் சாதனையாக்கும் வலிமையை ஒவ்வொருவரும் பெற்றிருக்கிறோம்.
அதிகார மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டோம் - மக்கள் நலன் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் கருணாநிதி வழியில் துணிந்து நடை போடுவோம்.
குறுக்கே வரும் தடைகளைத் தகர்த்து நம் பயணம் தொடர்வதாகவும், வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்" என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK Head MK stalin Letter to Perty members june 23