ஜம்மு-காஷ்மீர் ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரில், சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்ட சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேலும் மாநில அந்தஸ்து மறுக்கப்பட்டு நடைபெறும் தேர்தல் என்பதால், அங்கு போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ஜம்மு காஷ்மீர் தேர்தலில் அனைத்து மக்களும் அதிக அளவில் வாக்களித்து ஜனநாயகத்தின் திருவிழாவை வலுப்படுத்த வேண்டும் என்றும், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

தொடர்ந்து வரும்  25ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மற்றும் அக்டோபர் 1ம் தேதி  மூன்று கட்ட தேர்தல் என்று மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. 
 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Everyone should vote in Jammu and Kashmir democracy festival PM Modi appeals


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->