திமுக அமைச்சர்கள் சொத்துகுவிப்பு வழக்கு! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
DMK ministers property case chennai high court Judgement
கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக 76.40 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2012 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதேபோல் கடந்த 2006 - 2011 ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் 44.56 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிழமை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரையும் இந்த வழக்குகளில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அதன் படி, இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த மார்ச் மாதம் துவங்கிய, அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்தது.
இந்த நிலையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
மேலும் அமைச்சர்கள் மீதான இந்த சொத்து குறிப்பு வழக்குகளில் நாள்தோறும் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் இருவரும் வழக்கின் விசாரணைக்காக வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
English Summary
DMK ministers property case chennai high court Judgement