காலம் கனிந்து விட்டது.."உதயநிதியை துணை முதல்வராக்குங்க ".. பெரம்பலூர் எம்எல்ஏ கோரிக்கை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பெரம்பலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அப்பொழுது பேசிய அவர் "பெரம்பலூர் நகரம், அகரம், சீசூரில் தனி காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு தனி கோட்டாட்சியளிகளின் நியமிக்க வேண்டும். 

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பேரவையில் எனது கண்ணிய பேச்சில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு காலம் கனிந்து விட்டது. அதற்கு நமது முதலமைச்சர் மனம் கனிய வேண்டும் என பேசி இருந்தேன். 

இன்று பலரும் வாழ்த்தும் வண்ணம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி பதவியேற்று பலரும் தக்க வகையில் செயலாற்றி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் வானியில் நின்று விளையாடி ஃபோர், சிக்ஸர் என கலக்குகிறார். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் உன்னதமான உழைப்பு, பொதுமக்களின் அவரது கனிவான அணுகுமுறை, செயலாற்றும் பாங்கு ஓரிரு துறைகளோடு நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி நமது நம்பர் 1 முதலமைச்சரின் தலைமையின் கீழ் அனைத்து துறைகளிலும் அவரது உழைப்பு சீரிய சிந்தனை, மகளிர் உயர்வு குறித்த தொலைநோக்கு திட்டம் ஆகியவற்றை குறித்த பணிகளை முதலமைச்சரின் துணை நின்று மேற்கொள்ள வேண்டும் என பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்" என பேசி அமர்ந்தார்.

பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனின் இத்தகைய பேச்சிற்க்கு திமுகவைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்பு தெரிவித்தனர். அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்ற பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனின் மறைமுக பேச்சுக்கு சட்டசபை பேரவையில் உள்ள அனைவரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். கூடிய விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA demands Udhayanidhi become Deputy CM post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->