செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கின் கிளைமாக்ஸ் திருப்பம்! சந்தேகத்தில் உச்ச நீதிமன்றம் - கடைசி வழக்காக மீண்டும் விசாரணை! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு விசாரணை நிறைவடைந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் விசாரணை செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ள மூன்று மூல வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தப் போகிறதா?

குற்றம் சாட்டப்பட்ட 2500 நபர்களையும் விசாரிக்க போகிறதா என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என கூறி செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை மீண்டும் விசாரணையை செய்ய உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதற்கிடையே, அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜென்ரல் மற்றொரு வழக்கில் ஆஜராகி இருப்பதால் வழக்கை மதியத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இன்றைய தினம் இறுதி வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இன்றைய தினம் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சொல்லும் பதிலின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா கிடைக்குமா என்பது தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Senthil Balaji bail case sc aug 24


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->