அண்ணாமலை மீது வழக்கு தொடர்ந்தார் டிஆர் பாலு! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருந்த நிலையில், அவர் மீது திமுக எம்பி டி.ஆர். பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்ட திமுகாவிரின் சொத்து பட்டியலில், ஜெகத்ரட்சகன் - ரூ.50 ஆயிரம் கோடி, எ.வ.வேலு - ரூ.5 ஆயிரம் கோடி, கே.என்.நேரு - ரூ.2,495 கோடி, கனிமொழி- ரூ.830 கோடி, கலாநிதிமாறன் - ரூ.12 ஆயிரம் கோடி, உதயநிதி - ரூ.2 ஆயிரம் கோடி, சபரீசன் - ரூ.902 கோடி மற்றும் டிஆர் பாலு 11 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக அண்ணாமலை அதில் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் 200 கோடிக்கு ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி அண்ணாமலைக்கு திமுகவினர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனுப்பட்ட நோட்டிஸ் அனைத்திற்கு அண்ணாமலையும் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில், அண்ணாமலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டிஆர் பாலு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னதாக, கடந்த வாரம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு க ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MP TR Balu filed defamation Case against Annamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->