தி.மு.க ஆட்சி ஊழல் செய்வதில் தான் முதலிடம் - அண்ணாமலை கருத்து!
DMK regime first corruption Annamalai
திமுக ஆட்சி ஊழல் செய்வது, கடன் வாங்குவது, பொய் சொல்வதில் தான் முதலிடத்தில் இருக்கிறது என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில் மேற்கொண்டிருக்கும் நடைபயணம் இன்று, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மற்றும் அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
திருமயம் கோட்டையில் காலை 9 மணிக்கு தொடங்கிய நடைபயணம், தகரக் கொட்டகை, பாப்பாவயல், பழைய நீதிமன்றம் வழியாக திருமயம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
அங்கு அண்ணாமலை பேசியதாவது, ''திருமயம் தொகுதியிலிருந்து அமைச்சராகியிருப்பவர் ரகுபதிக்கு ஊழல் தடுப்புத் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவர் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர். இந்த ஆட்சியை தான் திராவிட மாடல் என்கிறார்கள்.
அதிகமாக கடன் வாங்குவதும், பொய் சொல்வதும், ஊழல் செய்வதிலும் தி.மு.க முதலிடத்தில் இருக்கிறது. 2 அமைச்சர்கள் இந்த மாவட்டத்தில் இருந்தும் எந்தப் பயனும் இல்லை.
மோடிதான் மீண்டும் பிரதமராகப் போகிறார். அப்போது இங்கிருந்து பா.ஜ.க எம்.பி செல்வதற்காகத்தான் இந்த யாத்திரை'' என்றார் அண்ணாமலை.
இதனை அடுத்து அண்ணாமலை லெணாவிலக்கு பகுதிகளில் இருந்த சிற்பக்கூடத்தை பார்வையிட்டார். அவருடன் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
English Summary
DMK regime first corruption Annamalai