அண்ணாமலைக்கு ஓராண்டு சிறைத்தண்டனை? டிஆர் பாலு, ஆர்எஸ் பாரதி பகீர் பேட்டி!
DMK RS Bharati Say About Annamalai Case DMK File
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தபின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக எம் டிஆர் பாலு கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது ஆர்.எஸ்.பாரதி தெரிவிக்கையில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி, பொருளாளர் டி ஆர் பாலு உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள் மீது, ஏப்ரல் 14ஆம் தேதி பாஜகவின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் அவதூறாக புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.
அவர் பேட்டி அளித்த அரைமணி நேரத்திற்குள் அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் பதில் கொடுத்து விட்டோம்.
அந்த கூட்டத்திலே அவர் சொன்ன அவதூறான வாசகங்களை திரும்ப பெற வேண்டும், மன்னிப்பு கூற வேண்டும் என்று தலைவர் தளபதியின் சார்பிலும், கழகத்தின் பொருளாளர் டி ஆர் பாலு சார்பிலும் நோட்டீஸ் அனுப்பி, ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும், இதுவரையில் அவர் பதில் சொல்லவில்லை.
அவர் அறிக்கை மட்டும்தான் கொடுக்கிறார். சட்ட ரீதியான பதிலை எதுவும் அவர் தரவில்லை. ஒரு மாத கால அவகாசம் அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. அவர் மன்னிப்பும் கூறவில்லை, அவர் வார்த்தைகளை திரும்ப பெறவும் இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக முதலமைச்சர் தளபதியின் சார்பில் சார்பில் சென்னை செஷன் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது செய்தார்பேட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பொருளாளர் டிவி ஆர் பாலு சார்பாக அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திமுக யார் மீதும் பொய் வழக்கு போட்டதில்லை, திமுக தொடர்ந்த அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளது வரலாறு.
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது போடப்பட்ட வழக்கில் ஓராண்டு தண்டனை கிடைக்கும்" என்று ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
English Summary
DMK RS Bharati Say About Annamalai Case DMK File