முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59 வது முறையாக நீட்டிப்பு!
DMK Senthilbalji Case Court order sep 5
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 59 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று காணொளி காட்சி மூலம் ஆஜராகிய செந்தில் பாலாஜிக்கு, நீதிமன்ற காவலை செப்டம்பர் 13ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழக்கும், பின்னணியும்:
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம், 14 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இவரின் ஜாமின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது, இந்த விசாரணை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையே, செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரணை செய்துவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றசாட்டு பதிவு நடந்து முடிந்து, தற்போது சாட்சிகளின் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் முதல் சாட்சியான கரூர் வங்கி கிளை மேலாளர் ஹரிஷ்குமாரிடம் அமலாக்கத்துறை தரப்பில் விசாரணை முடிந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 13ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
DMK Senthilbalji Case Court order sep 5