நிர்வாகத் திறமை இல்லாத ஸ்டாலின்! ஒழுக்கம் இருந்தால் தான் நிர்வாக திறமை இருக்கும்! - Seithipunal
Seithipunal


தீபாவளிக்கு 600 கோடி டாஸ்மார்க் விற்பனை டார்கெட் வைத்த செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் டாஸ்மாக்கில் மதுபானங்கள் பல நூறு கோடி ரூபாய் கணக்கில் விற்பனையாகும். எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான மதுபானங்களை இருப்பு வைக்குமாறு மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களைஇருப்பு வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்தன. இருப்பு வைக்கப்படும் மதுபானங்களில் 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த வருடம் தீபாவளி வரும் 24ம் தேதி திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை நாட்களாக அமைந்துள்ளன. இதன் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் அளவு மது விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாய்மொழி உத்தரவாக 600 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

 

இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் " தீபாவளிக்கு 600 கோடி டாஸ்மார்க் விற்பனைக்கு இருப்பவை வையுங்கள் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். திமுக அரசின் நிர்வாக திறமை இவ்வளவுதான். தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் நிர்வாக திறமை இல்லாதவர். ஒழுக்கம் இருந்தால்தான் நிர்வாக திறமை வரும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத் காட்டமாக ஸ்டாலினை விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Stalin so not have administrative skills


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->