மக்களுக்கு இலவச தக்காளி வழங்கிய அ.தி.மு.க! நல்லாட்சியை மலர வைக்க சொன்ன வி.என்.ரவி! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத்தொடும் அளவுக்கு உயர்ந்து விட்டதால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், சென்னை மேற்கு வட்டத்தில் வட்ட செயலாளர் ஏ.குட்டி ஏற்பாட்டில், விருகம்பாக்கம் தொகுதி 138-வது பொது மக்களுக்கு விலை இல்லா தக்காளி வழங்கப்பட்டது. 

இது குறித்து மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி தெரிவிக்கையில், ''அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது தக்காளி விலை உயர்வு ஏற்பட்டதால் அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கினோம். 

ஆனால் தற்போதைய அரசோ மக்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து நல்ல திட்டங்களை நாளுக்குநாள் முடக்கி வைத்துள்ளது.வருகிற சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் நீங்கள் தான்  இந்த அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். 

தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர வைக்க இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களித்து அண்ணன் எடப்பாடியாரை முதல்வராக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk women's rights review


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->