அனுமதியில்லாமல் பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு - மருத்துவமனையின் விளக்கத்தால் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


அனுமதியில்லாமல் பெண்ணுக்கு குடும்பக் கட்டுப்பாடு - மருத்துவமனையின் விளக்கத்தால் அதிர்ச்சி.!

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் முகம்மதியாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆஷிசாபானு. இவர் நேற்று இரவு பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில  இன்று அதிகாலை 5 மணிக்கு அவருக்கு அறுவைச்சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது.

அதன் பின்னர் மருத்துவர்கள் ஆஷிசாபானுவின் அனுமதி இல்லாமலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையினையும் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து  ஆஷிசாபானு தனது உறவினர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவைச்சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி மருத்துவமனை டீனிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனையின் டீன், "ஆஷிசா பானுவின் கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்துள்ளது. இதனால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் ஆலோசனை செய்த பின்னரே இந்த அறுவைச் சிகிச்சையை செய்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், குழந்தையை காப்பாற்ற இந்த அறுவைச்சிகிச்சை தான் நல்ல முடிவு. இதனால், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்காது. இருப்பினும் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது'' என்றுத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

doctors family planning without permission in madurai rajaji hospital


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->