பகுதிநேர ஆசிரியர்களின் மே மாத சம்பள விவகாரம் - பள்ளிக் கல்வித்துறை விளக்கம்! - Seithipunal
Seithipunal


12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள், அரசு பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்றனர். வாரந்தோறும் 3 நாட்கள் பள்ளிகளில் இவர்கள் பாடம் நடத்துவர்.

மாத சம்பளமாக ரூ.10 ஆயிரம், அரசு தரப்பில் இருந்து அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு 11 மாதங்கள் (மே தவிர்த்து) சம்பளம் கொடுக்கப்படுகிறது.

பள்ளிகளின் விடுமுறை காலமான மே மாதத்திலும் சம்பளம், மற்றும் நிரந்தர பணியமர்த்தம், உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் சார்பில், சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த மாதம் உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.

அப்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதாக அரசின் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.ஆனால் இதுவரை சொல்லியபடி ஊதியம் எதுவும் தரப்படாததால் பகுதிநேர ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது; அரசின் தரப்பில் இருந்து, மே மாதம் சம்பளம் வழங்கப்படுவது குறித்து, பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு, எந்தவித உறுதியும் தரப்ப்படவில்லை. அவர்கள் வைத்த கோரிக்கைகளை பரிசீலிப்பதை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு  செல்லப்படும் என்றே தெரிவிக்கப் பட்டது’’ என்று கூறினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Does Salary Confirmd for Temporary Government school Teacher


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->