சென்னை கோட்டூர் புறத்தில் இரட்டைக்கொலை சம்பவம்; கொலை செய்யப்பட்ட காதலியால் பகை..!
double murder incident in Kotturpuram chennai
சென்னை, கோட்டூர்புரத்தில் அருண் மற்றும் சுரேஷ் ஆகிய 02 பேரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.
கோட்டூர்புரம் சித்ரா நகரை சேர்ந்தவர் அருண் காஞ்சிபுரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. இவரது நண்பர் படப்பை சுரேஷ் என்பவரும் நேற்றிரவு மது போதையில் கோட்டூர் புறம் நாகவல்லி கோவில் முன்பு படுத்து இருந்துள்ளனர். அப்போது இரு சக்கரத்தில் வந்த 08 பேர் கொண்ட மர்ம நபர்கள் அருண் மற்றும் சுரேஷ் இருவரையும் அறிவாளால்சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
பலத்த காயம் காரணமாக படப்பை சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் விரசனை மேற்கொண்டுள்ளனர். அதில் அருணின் காதலியை சுக்கு காப்பி சுரேஷ் வெட்டி கொன்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதற்கு பலி தீர்ப்பதற்காக அருண் திட்டமிட்டுருந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை சுக்கு காப்பி சுரேஷ் அறிந்துள்ளார்.
இதனால், அருணையும் அவரது அண்ணன் அர்ஜுனையும் கொலை செய்வதற்காக வந்துள்ளார். படைப்பை சுரேஷை அர்ஜுன் என கருதி வெட்டி கொன்றுள்ளனர்.தப்பி சென்றுள்ள சுக்கு காபி சுரேஷ் உள்ளிட்ட 08 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கோட்டூர் புறத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
double murder incident in Kotturpuram chennai