ரூ.2 லட்சம் கோடி! நீட் விவகாரத்தில் பூகம்பத்தை உண்டாக்கிய அன்புமணி இராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தாவது," தமிழகத்தின் உரிமைகளை நாங்கள் எள்ளளவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை. கோயம்புத்தூர் மெட்ரோ திட்டமாக இருந்தாலும், சரி சென்னை மெட்ரோ திட்டமாக இருந்தாலும் சரி, தமிழகத்திற்கான நிதியை நாங்கள் சண்டை போட்டு வாங்குவோம். 

ஆரம்பம் முதலே நீட் தேர்வு இருக்கக்கூடாது என்பது தான் எங்களுடைய கொள்கை. தேவை இல்லாத ஒரு தேர்வு இது. ஒவ்வொரு மாநிலத்திற்கு உண்டான கொள்கையை மத்திய அரசு விட்டுக் கொடுத்து விட வேண்டும். 

நீட் தேர்வு என்பது கிராமப்புறம் மாணவர்களுக்கு எதிரானது. சமூக நீதிக்கு, ஏழை மாணவர்களுக்கு எதிரானது. அது மட்டுமல்லாமல் அண்மையில் ஒரு பரிந்துரை வர செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு இரண்டு கட்ட தேர்வுகளாக நடக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. அப்படி நடந்தால் இன்னும் கூடுதலான பயிற்சி தேவைப்படும். 

இந்த நீட் தேர்வினால் ஆண்டுதோறும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் நீட் பயிற்சி மையங்களுக்கு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வுக்கு முன்னாள் கல்லூரியில் சேர மாணவர்கள் ஐந்து லட்சம், ஆறு லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய நிலை இருந்தது. தற்போது 30 லட்சம் ரூபாய் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

நீட் தேர்வு என்பது பணக்காரர்களுக்காக மட்டுமே வந்துள்ளது. ஏழை மாணவர்களுக்கு இல்லை. நீட் பயிற்சி மையங்களுக்காக மட்டுமே இந்த நீட் தேர்வு வந்துள்ளது. தவிர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இல்லை. சிபிஎஸ்சி பாடத்திட்டம் தான் நீட் தேர்வு. மாநில அரசின் பாடத்திட்டத்தில் நீட் தேர்வு வராது. 

இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், குறிப்பாக தனியார் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கல்வி முறையே தவறான ஒரு கான்செப்டாக நான் பார்க்கிறேன்.

குறிப்பாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழகத்தின் வரலாறு எல்லாம் இடம்பெறாது. எனவே நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Say About NEET Exam issue Neet Coaching cost


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->