போதை மாத்திரைகள் விற்பனை: கையும் களவுமாக பிடிபட்ட கல்லூரி மாணவர்! - Seithipunal
Seithipunal


தேனி, ஆண்டிப்பட்டி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 பேரை கைது செய்தனர். 

அவர்களிடம் டேப் பெண்டாடல் ஹைட்ரோகுளோரைடு என்ற போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 30 ஆயிரம்.

அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் சிலர் போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் போதை மாத்திரைகளை விற்பனை செய்பவர்களை பிடிக்க ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர்களிடம் போதை ஊசி மற்றும் மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும் பிடிபட்டவர்கள் தினேஷ்குமார் (வயது 24). வைரக்குமார் (வயது 25), ஜேசுதாசன் (வயது 20) மற்றும் இன்பகுமார் (வயது 19) என்பது தெரியவந்தது. 

இதில் ஜேசுதாசன் பெட்ரோல் வங்கியில் வேலை பார்த்து கொண்டு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் இன்பகுமார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு சக மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்கு மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drugs selling college student arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->