சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் கேட்ட சப்ளையர்.! கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய போதை ஆசாமி.!
Drunk assailant who cut supplier throat in tirupattur
திருப்பத்தூரில் சாப்பிட்ட பரோட்டாவிற்கு பணம் கேட்ட சப்ளையரின் கழுத்தை அறுத்த போதை ஆசாமி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் ஆரிப் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் சலீம். இவரது மகன் அன்சர் (38) புதுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முடியும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பைரோஸ்(40) என்பவர் குடிபோதையில் ஓட்டலுக்கு வந்து இரண்டு ஸ்பெஷல் பரோட்டா சாப்பிட்டு உள்ளார்.
பின்பு சாப்பிட்ட பரோட்டாவிற்காக ரூபாய் 120 அன்சர் பைரோசிடம் கேட்டுள்ளார். அப்பொழுது குடிபோதை இருந்த பைரோஸ் அவரிடம் தகராறில் ஈடுபட்டு பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளார்.
இதையடுத்து மீண்டும் இரவு ஓட்டலுக்கு வந்த பைரோஸ், அனைவரின் முன்பு என்னிடம் பணம் கேட்கிறாயா என்று அன்சரிடம் தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்சரின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் இருந்தவர்கள் அன்சரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து, திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய பைரோஸை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Drunk assailant who cut supplier throat in tirupattur