திண்டுக்கல் - மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய நபர் - செக்யூரிட்டி வேலை பார்த்த தெருநாய்கள்.!! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் - மதுபோதையில் சாலையில் படுத்து தூங்கிய நபர் - செக்யூரிட்டி வேலை பார்த்த தெருநாய்கள்.!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் நேற்று இரவு மதுபோதையில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில், இவர் அம்பேத்கார் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது போதை தலைகேறியதால், அவர் தான் வந்த சைக்கிளை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு மண் தரையில் படுத்து உறங்கியுள்ளார்.

இவருடன் அதே பகுதியை சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சுற்றி படுத்திருந்தது. இதனை பார்க்கும் போது மதுபோதையில் கிடந்த அந்த நபருக்கு தெரு நாய்கள் பாதுகாவலர் போன்று பாதுகாப்பு கொடுப்பதாக இருந்தது.

அந்த நபர், முழுமையாக போதை தெளிந்த பின்னர் அங்கிருந்து எழுந்து செல்லும் வரை நாய்களும் அங்கேயே படுத்திருந்தன. தெரு நாய்களின் பாதுகாப்பில் மதுபோதை ஆசாமி நிம்மதியாக தூங்கிய காட்சி அப்பகுதியில் உள்ளவர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

மதுவினால் நிகழும் பல்வேறு குற்ற சம்பவங்கள் மக்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தாலும், ஒருபுறம் மதுபிரியர்களால் இதுபோன்று வேடிக்கையான சம்பவங்களும் நிகழ்ந்துகொண்டு தான் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drunk man slept in road with dogs in dindukal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->