அண்ணா பல்கலை., மாணவி வழக்கு - விசாரணை குழுவில் இருந்து அதிகாரி விலகல்.!
dsp resign anna university harassment case special investigation team
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, இந்த வழக்கை சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த குழுவின் பரிந்துரை பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அதே நேரத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், எழும்பூரில் உள்ள சிறைத்துறை அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கினை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து சைபர் கிரைம் டி.எஸ்.பி. ராகவேந்திரா ரவி விலகியுள்ளார். மேலும் குழு அதிகாரிகள் தனது பணியை சரிவர செய்யவிடாமல் தடுப்பதாகவும், இதன் காரணமாக விசாரணைக் குழுவில் இருந்து தான் விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு குழுவில் இருந்து டி.எஸ்.பி. ரவி விலகியது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dsp resign anna university harassment case special investigation team