பணமோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி பணியிடை நீக்கம்.!
dsp suspend for bribe in IFS company in vellore
பணமோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி பணியிடை நீக்கம்.!
வேலூர் மாவட்டத்தில் ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீடு செய்வோருக்கு 25% வட்டித் தருவதாக விளம்பரம் செய்தது. இதனை உண்மை என்று நம்பிய பொதுமக்கள் 6000 கோடி ரூபாய் வரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த நிறுவனம் சொன்னபடி மக்களுக்கு பணம் தரவில்லை.
இதையடுத்து முதலீட்டாளர்களும் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் அழைப்பை ஏற்கவில்லை. இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பண மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லட்சுமிநாராயணன் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கபிலன் மற்றும் அருள் ஆகியோர் தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தி 4 வாகனங்கள், ரொக்கப்பணம், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
ஆனால், இந்த வழக்கில் நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் இருந்தது. இது தொடர்பாக துறைரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களிடம் டிஎஸ்பி கபிலன் பேரம் பேசி இருப்பதும், நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதற்காக 5 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் டிஎஸ்பி கபிலன் வீட்டில் ஆய்வு நடத்தியதில் 5 கோடி ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
dsp suspend for bribe in IFS company in vellore