நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை : உதகை - மேட்டுப் பாளையம் மலை ரயில் ஆகஸ்ட் 6 வரை ரத்து..!! - Seithipunal
Seithipunal


உதகமண்டலம் - மேட்டுப் பாளையம் இடையேயான மலை ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ரத்து செய்யப் பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்லார் மற்றும் ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையேயான மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ரயில் தண்டவாளங்களில் மரங்களும், பாறைகளும் சரிந்து ரயில் பாதையை மூடியுள்ளன. 

இதையடுத்து தண்டவாளத்தில் சரிந்து விழுந்துள்ள பாறைகளையும், மரங்களையும் அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு நேற்று காலை 7.10 மணியளவில் புறப்பட இருந்த ரயிலும், உதகையில் இருந்து மேட்டுப் பாளையத்திற்கு பகல் 2 மணிக்குப் புறப்பட இருந்த ரயிலும் ரத்து செய்யப் பட்டுள்ளன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையோ, மற்றும் ரயில் பாதைகளை சீரமைக்கும் பணிகளையோ ரயில்வே ஊளியர்களால் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக ரயில் பாதையில் சரிந்துள்ள பாறைகள், மரங்களை அகற்ற தாமதம் ஏற்படுவதால், மேட்டுப் பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் சேவை வரும் ஆகஸ்ட் 6ம் தேதி வரை ரத்து செய்யப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதையடுத்து ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணத் தொகை முழுவதுமாக திருப்பி செலுத்தப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Due to Heavy Rain Ooty - Mettuppalayam Mountain Railway Train Cancelled Till August 6


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->