காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆமை குஞ்சு பொரிப்பு !! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஆமை குஞ்சு பொரிக்கும் சீசன் தொடங்கும் இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. இந்த காலகட்டத்தில்தான் ஆலிவ் ரிட்லி உள்ளிட்ட ஆமைகள் கரையோரத்தில் உள்ள தீவுகளில் முட்டையிட வரும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆமைகள் குஞ்சு பொரிக்கும் மூன்று முக்கியமான இடங்கள் உள்ளன அதில் கீழக்கரை, மண்டபம் மற்றும் தூத்துக்குடி உட்பட மொத்தம் 10 குஞ்சு பொரிப்பகங்கள் உள்ளன.

கடந்த 2021 - 2022 ஆம் ஆண்டு வரையிலான விவரங்களின்படி, வனத்துறையினர் கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 24,391 முட்டைகளை எடுத்து சேகரித்து, அதை குஞ்சு பொரிக்கும் செயல்முறைக்குப் பிறகு, சுமார் 23,617 குஞ்சுகள் கடலில் பத்திரமாக விடப்பட்டன. 

இதைத்தொடர்ந்து கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டில், இது மூன்று இடங்களிலிருந்தும் 24,005 முட்டைகளை சேகரித்தது மற்றும் குஞ்சு பொரிக்கும் செயல்முறைக்குப் பிறகு 23,048 க்கும் மேற்பட்ட குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. இந்த ஆண்டு முட்டைகளின் எண்ணிக்கை, 28,000 அதிகரித்துள்ளது.

"தனுஷ்கோடிகடற்கரை பகுதிகளில் அதிகரித்து வரும் கடல் அலை இந்த ஆண்டு குஞ்சு பொரிக்கும் பருவத்தை பெரிதும் பாதித்துள்ளது" என வனத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆமை குஞ்சு பொரிப்பகங்களில் வைக்கப்பட்டிருந்த முட்டைகளின் ஒரு பகுதி கடல் அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரு காலங்களில் பல்வேறு இடங்களில், ஆமை குஞ்சு பொரிப்பகங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக, வனத்துறையினர் இரண்டு வகையான குஞ்சு பொரிப்பகங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது அவை மூடிய மற்றும் திறந்த பொரிப்பகங்கள் ஆகும். தற்போது தூத்துக்குடியில் உள்ள குஞ்சு பொரிப்பகங்களில் வெற்றி விகிதம் 95.6% ஆக அதிகரித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

due to seasonal change turtle hatching


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->