கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்! மின் துறை அமைச்சரிடம் துரை வைகோ நேரில் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


விடுபட்ட கேங்மேன் பணியாளர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என துரை வைகோ மின்துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். 

இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே கடந்த மாதம் 19ஆம் தேதி அன்று விடுபட்ட கேங்மேன் தொழிலாளர்கள் என்னைச் சந்தித்து, தங்களது குறைகளை தெரிவித்தபோது, இது குறித்து நான் மின் துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். தேவைப்பட்டால் முதலமைச்சர் அவர்களைச் சந்திப்பேன் என்று கூறினேன்.

அதன் அடிப்படையில், இன்று கேங்மேன் பணியாளர்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மின்சாரத் துறை அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.

அமைச்சர் அவர்களும், இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அந்த கமிட்டி விரைவில் தன்னுடைய அறிக்கையை கொடுத்தவுடன், இது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று சொன்னார்கள்.

விடுபட்ட கேங்மேன் பணியாளர்கள் குறித்து கமிட்டி அமைக்கப்பட்டுள்ள தற்கும் நன்றி தெரிவித்தேன். அது போலவே மின் வாரியத்தில் பணி புரிகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணி நிரந்தரம் குறித்தும் பேசினேன்.

வாரியத்தின் நிதி நிலைமை சீரான உடன் கண்டிப்பாக இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்கின்ற உத்தரவாதத்தையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். 

இந்தச் சந்திப்பில் மின்துறை அமைச்சர் அவர்களின் பணிகளை, அதுவும் குறிப்பாக மின் தடங்கல் ஏற்பட்டால் அதை சரி செய்யக்கூடிய மின்னகம் சார்ந்த பணிகள், அதில் வருகின்ற அனைத்து புகார்களும் 99% நிறைவேற்றப்பட்டு இருப்பதற்காக பாராட்டுகளைத் தெரிவித்ததோடு, மின்துறை குறுகிய காலத்தில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகளை வழங்கும் என்கின்ற நோக்கத்தோடு வருகின்ற 16 ஆம் தேதி அன்று ஒரு லட்சமாவது மின் இணைப்பினை மாண்புமிகு முதல்வர் அவர்கள் துவக்கி வைக்க இருப்பதற்கு மதிமுக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தேன்.

அமைச்சர் அவர்களும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அதுபோலவே மதிமுக, திமுக ஆட்சிக்கு, மக்களிடம் ஒரு பாலமாக இருக்கும் என்கின்ற செய்தியையும் தெரிவித்து, அவருடைய பணிகளை ஒட்டுமொத்தமாக பாராட்டினேன் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Durai vaiko met minister senthil Balaji


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->