மேகதாது அணை விவகாரம்.. நாளை டெல்லிக்கு விரைகிறார் அமைச்சர் துரைமுருகன்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா அரசு காவிரியில் மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சந்தித்த நாளை காலை டெல்லி செல்ல உள்ளார். தமிழக முதலமைச்சருடன் இன்று காலை ஆலோசனை நடத்தியுள்ள அமைச்சர் துரைமுருகன் மாலை நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் ஜூலை மாதத்தில் திறந்து விட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து ஆலோசனை நடத்தி அது தொடர்பான ஆவணங்களுடன் நாளை காலை டெல்லி செல்ல உள்ளார்.

இந்த பயணத்தின் போது காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளை சந்தித்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதம் நடத்த உள்ளதால் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்தியில் பாஜக அரசும் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் அமைந்துள்ளதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளதால் மேகதாது விவகாரம் இரு மாநில அரசியலில் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan meet Union Minister tomorrow regarding Meghadatu issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->