டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி! சிக்கலில் எடப்பாடி பழனிசாமி! ஆறு வாரம் கெடு, தேர்தல் ஆணையத்தில் பதில் என்ன?! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் 6 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்த தேர்தல் ஆணையம் அங்கீகரித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு வாரங்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது மற்றும் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள், அதிமுகவின் சட்ட விதி திருத்தங்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கே சி பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

இந்த வழக்கை இன்று விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரித்தது குறித்து இன்னும் ஆறு வாரங்களில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dwlhi HC order to EC for ADMK EPS case 04052023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->