உதயநிதிக்கே விபூதி அடித்து, பொய் பரப்பும் தமிழக அரசின் TN Fact Check கும்பல்!
DyCM Udhay TN Fact Check PMK Dr Ramadoss
பசுமை தயக்கம் அமைப்பை சேர்ந்த அருள் ரத்தினம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் "மாதம் ரூ. 30 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டு பொய் பரப்பும் தமிழக அரசின் TN Fact Check கும்பல்!"
சென்னையில் அதிகபட்சமாக 6.1 செ.மீ மழை எனும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை TN Fact Check ஏன் மறுக்கவில்லை?
"நேற்று பெய்த 6 செ.மீ மழைக்கே சென்னையின் பல இடங்களில் மழை நீர் தேங்கியதாக" - இன்று காலை மருத்துவர் அய்யா அவர்கள் X தளத்தில் பதிவிட்டார்கள். இது தவறான தகவல் என்றும், அதிகபட்சமாக 10 செ.மீ வரை மழை பெய்துள்ளதாகவும் தமிழக அரசின் TN Fact Check செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே இன்று பேட்டியளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் - சென்னையில் அதிகபட்சமாக 6.1 செ.மீ மழை பெய்ததாக குறிப்பிட்டார்! ( காண்க: https://youtube.com/live/SqYTq86wO3c?t=4222s )
மருத்துவர் அய்யா அவர்களின் பதிவை "தவறான தகவல்!" என்று குறிப்பிட்ட அதே TN Fact Check அமைப்பு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியை ஏன் மறுக்கவில்லை?
குறிப்பு: தமிழக அரசின் TN Fact Check கும்பல் என்பது ஒரு திமுக அடியாள் கும்பலாகும். இதில் பணியாற்றும் 80 பேர், மாதத்திற்கும் மொத்தம் ரூ. 30 லட்சம் மக்கள் பணத்தை சம்பளமாக வாங்குகிறார்கள். இதன் இயக்குநராக உள்ள ஐயன் கார்த்திகேயன்-க்கு மட்டும் ரூ. 3 லட்சம் மாத ஊதியமாகும்.
'அரசின் உண்மை கண்டறியும் அமைப்புகள் சட்டவிரோதமானவை, அரசியல் அமைப்புக்கு எதிரானவை' என அண்மையில் மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கும் பொருந்தும்.
திமுகவின் அடியாள் படைக்கு மாதம் 30 லட்சம் ரூபாய் அரசு நிதியை ஊதியமாகக் கொடுப்பது மிக மோசமான நாணயமற்ற செயல். இந்த அமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
DyCM Udhay TN Fact Check PMK Dr Ramadoss