சென்னையில் தேடுதல் வேட்டை.. இயக்குநர் அமீரை சுத்து போட்ட ED.. அதிரும் தலைநகரம்.!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கு தொடர்பு தெரிய வந்தது அடுத்து அவரை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்தனர். 

இந்த நிலையில் சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

போதைப் பொருள் மூலம் பெற்ற பணத்தில் நிதி தொடர்பான முறைகேடுகள் நடைபெற்றதாக தெரியவந்ததை எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போதை பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிப்பு தொடர்புடைய இடங்களை தவிர்த்து புகாரி ஹோட்டல் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரபல திரைப்பட இயக்குனர் அமீர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரான இயக்குனர் அமீரிடம் அதிகாரிகள் 11 மணி நேரம் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இயக்குனர் அமீரும் போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாப்பர் சாதிக்கும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்தனர். நரேந்திர மோடி சென்னை வரும் சமயத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED Raid around 35 location in Chennai linked to jaffar Sadiq


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->