லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை.!! அமலாக்கத்துறை மீண்டும் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மார்ட்டினின் மருமகனும், அரைஸ் குழுமத்தின் நிர்வாகியும், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவருமான ஆதவ் அர்ஜுனின் அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 25ம் தேதி சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக வருமானவரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அவரது மகன் வீடுகளிலும் அமலாக்கதுறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மார்டினுக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூன் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினரின் சோதனையை தொடர்ந்து, இன்று மீண்டும் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வந்த அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனையை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை ரூ.173 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED raided 5 places belonging to businessman Martin


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->